பட்டுக்கோட்டையில் ஏடிஎஸ்பி ரகுபதி அவர்களின் இல்லத் திருமண விழா கோலாகலம் : தி பப்ளிக் ரிப்போர்ட்டர், காலை தீபம் நாளிதழ் செய்தி ஆசிரியர் எம். ஆத்திமுத்து, மாநில வஉசி நல பேரவை நிறுவனத் தலைவர் தூத்துக்குடி எஸ். சரவண பெருமாள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!!

பட்டுக்கோட்டை, செப், 13

தமிழக காவல்துறையில் ஏடிஎஸ்பி யாக பணியாற்றி வருபவர் ரகுபதி இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர். அதன் பிறகு திருச்சி காவல் ஆய்வாளராகவும் அதன் பிறகு சென்னை எக்மோர் உதவி ஆணையராகவும் பணியாற்றி வந்தார் அதன் பிறகு பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் ரகுபதி, முத்துச்செல்வி தம்பதியனரின் மூத்த மகன் சிவ பிரசாந்த், அம்பிகா ஆகியோரின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு பட்டுக்கோட்டை வளவன்புரம் பார்வதி மஹாலில் வைத்து திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தி பப்ளிக் ரிப்போர்ட்டர், புலனாய்வு இதழ், காலை தீபம் நாளிதழ் செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து, மாநில வ உ சி நல பேரவை நிறுவனத் தலைவர் தூத்துக்குடி எஸ். சரவண பெருமாள்,திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்பாஜக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், செய்தியாளர் தூத்துக்குடி கண்ணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் குமரகுருபரன், தூத்துக்குடி பேரூரணி பயிற்சி பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர்,உட்பட ஏராளமான காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.ஏடிஎஸ்பி ரகுபதி, முத்துச்செல்வி தம்பதியினர் மற்றும் அவரது இளைய மகன் சிவராஜ் பிரசாத் ஆகியோர் திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர் பட்டுக்கோட்டையில் ஏடிஎஸ்பி ரகுபதி, முத்துச்செல்வி தம்பதியினர் இல்ல திருமண விழா வெகு சிறப்பாகும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

Share This Article