கொடைக்கானல், செப், 17
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 8 ஆனந்தகிரி 4-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீர் நகராட்சி நிர்வாகத்தால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த
குடிநீர் கலங்களாக (சேறு மற்றும் மண் கலந்து) வருகிறது எனவும்
குடிதண்ணீர் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது எனவும்
இந்த அசுத்தமான மற்றும் கலங்கலான குடிநீரைப்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தினால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுமோ?? என்ற அச்சத்தில் இருந்த வருகின்றன
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி பொறியாளர் பிரிவு இன்ஜினியர், குழாய் ஆய்வாளர், பிட்டர் போன்றவர்கள் இது குறித்து பொது மக்களுக்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை.
இதனால் செய்வதறியாமல்
அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் வேதனையில் இருந்து வருகின்றன. இதுகுறித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலச் செயலாளர் கோடை ஆனந்த் தெரிவித்ததாவது
ஆனந்தகிரி 4-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில்
குடிநீர் கலங்களாக (சேறு மற்றும் மண் கலந்து) வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நீரை குடித்தால் பொதுமக்களுக்கு
நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்
ஏற்படலாம் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம்
மற்றும் கொடைக்கானல் நகராட்சி பொறியாளர் பிரிவு ஒட்டுமொத்த அதிகாரிகளும் குடிநீர் ஏன் மிகவும் கலங்கலாக காணப்படுகிறது என்பது குறித்தும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் நிலையில் மிகவும் கலங்கலாக குடிநீர் வருவது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் போதிய விளக்கங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் இதனை உடனடியாக சீர் செய்யும் வகையில் கொடைக்கானல்
நகராட்சி மற்றும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக
தூர்வாருதல்: கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் நீர்நிலைகள் மற்றும் விநியோகத் தொட்டிகளில் (Distribution Tanks) தேங்கியுள்ள சேற்றை உடனடியாகத் தூர்வார வேண்டும்.
முறையான குளோரினேஷன்: கலங்கல் நீரில் கிருமிகள் அதிகம் இருக்கும் என்பதால், விநியோகத்திற்கு முன் தண்ணீரில் தகுந்த அளவு குளோரின் கலக்கப்பட வேண்டும்.லாரி மூலம் நன்னீர் விநியோகம்: பாதிக்கப்பட்ட வார்டுகளுக்கு கொடைக்கானல் நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் சுத்தமான லாரி தண்ணீரை தற்காலிகமாக வழங்க வேண்டும். உடனடியாக இதனை சீர் செய்யாவிட்டால் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் கொடைக்கானல் நகராட்சியை பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் மாநிலச் செயலாளர் கோடை ஆனந்த் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிகண்ணீர் மிகவும் கலங்கலாக உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர் .இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.