மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!
தூத்துக்குடி, மார்ச்,15

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் (மத்திய சட்ட அதிகாரி) பொறுப்பில் . வழக்கறிஞர் பி. கனகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறையின் துணைச் செயலாளர் ராஜீவ் குமார் பிறப்பித்துள்ளார். இதன் முழுவிவரம் வருமாறு, சமூகத்தின் மீது பெரும் அக்கறை கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கு உதவி செய்தல், அதுபோல் சமூகத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிடுதல் அரசியல் சட்ட போராட்டத்திலும், சமூக புரட்சியிலும் முத்திரை பதிக்கும் வகையில் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியில் சிறப்பாக செயல்பட்ட கனகராஜ் தான் வகித்த அரசியல் களங்களிலும், சட்ட ரீதியான பணிகளிலும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நற்பெயர் பெற்று வந்தார். வழக்கறிஞர் கனகராஜ் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு தூத்துக்குடியில் உள்ள வணிகர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசு நோட்டரி வழக்கறிஞர் கனகராஜுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.