தமிழகத்தை ஆளுகின்ற கட்சியும், முன்பு ஆண்ட கட்சியும் மக்களுக்கு போதிய நல்ல திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டது :மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சி துவங்கப்பட்டது. பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ்பாண்டியன்,அதிரடி பேட்டி !

தமிழகத்தை ஆளுகின்ற கட்சியும், முன்பு ஆண்ட கட்சியும் மக்களுக்கு போதிய நல்ல திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டது :மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சி துவங்கப்பட்டது. பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ்பாண்டியன்,அதிரடி பேட்டி !!

தூத்துக்குடி,பிப், 1

தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் சார்பில் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் கட்சியின் தலைவர் டி.பி.எஸ். பொன்குமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ்பாண்டியன், முன்னிலை வகித்தார். துணை தலைவர் சிவா முத்துக்குமார், செயலாளர்கள் ரத்தினராஜா, சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின் தொடக்கமாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற தியாகிகளுக்கு நினைவு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் டி.பி.எஸ். பொன்குமரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,“லஞ்சம், ஊழலை ஒழிப்போம்; டாஸ்மாக்கை மூடுவோம்; கல்வியை வளர்ப்போம்; தொழில்களை பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்; விவசாயத்தை மேம்படுத்துவோம்; நவீன மருத்துவ வசதிகளை அதிகரிப்போம்; நீர் வளங்களை பாதுகாப்போம்; ஏரி, குளங்களை சீர்படுத்துவோம்; குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவோம்; சாலைகள், ரயில்கள், விமான போக்குவரத்துகளை நவீனப்படுத்துவோம்; ஜாதி, மத வேற்றுமைகளை அகற்றுவோம்; பழங்கால வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்போம்; காவல் நிலையங்களில் புகார்களுக்கு நேர்மையான, விரைவான நடவடிக்கை உறுதி செய்யப்படும்; அரசு அலுவலகங்களில் மனுக்களுக்கு காலதாமதமின்றி தீர்வு கிடைக்கும்; நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்காமல் துரிதமாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சம உரிமை ஜனநாயக அடிப்படையில் நடைபெறச் செய்வோம்” என கட்சியின் லட்சியங்களை விரிவாக எடுத்துரைத்தார் அதனை தொடர்ந்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் பேசுகையில்,“மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் முதன்மை கொள்கை. தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக போட்டியிடுவோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி, தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு அறிவிக்கப்படும்” என்றார்.மேலும் அவர், “தமிழகத்தை ஆளுகின்ற கட்சிகளாக இருந்தாலும், முன்பு ஆண்ட கட்சிகளாக இருந்தாலும், தமிழக மக்களுக்கு போதிய நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ என்ற பெயரை வைத்துள்ளோம். எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவரும் எந்தக் கட்சியாக இருந்தாலும், அது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக இருந்தாலும், எங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.

“தற்போது எங்கள் கட்சியில் உறுப்பினர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் இன்று பெரிய கட்சிகளாக உள்ள பல கட்சிகளும் தொடங்கிய காலத்தில் குறைவான உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தன. வரும் காலங்களில் எங்கள் கட்சி அதிகமான உறுப்பினர்களுடன் வலுவான மக்கள் இயக்கமாக உருவெடுக்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. இறுதியாக செயலாளர் சுடலைமணி நன்றியுரை ஆற்றினார்.

Share This Article