அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள வர்த்தக அணி அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி,ஜன,24


அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பிறந்த நாள் ஜனவரி 14 அன்று தூத்துக்குடியில் வெகு சிறப்பாக அதிமுகவினர் மற்றும் பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இயங்கி வரும் கழக வர்த்தக அணி அலுவலகத்தில் வைத்து பிற மாவட்டங்களைச் சார்ந்த அதிமுக வர்த்தக அணி நிர்வாகிகள், மற்றும் அதிமுகவினர் முக்கிய பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் கனி என்ற கணேஷ்,கழக வர்த்தக அணி துணை செயலாளர்கள் ஜி சங்கர்,சிவகுமார்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.