கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதாக தொழில்நுட்பக் கல்விக் கிடைக்க வழிகாட்டியாக விளங்கிய பொறியாளர் ஹரிஹரனுக்கு டாக்டர் பட்டம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பாராட்டு!!

கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதாக தொழில்நுட்பக் கல்விக் கிடைக்க வழிகாட்டியாக விளங்கிய பொறியாளர் ஹரிஹரனுக்கு டாக்டர் பட்டம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பாராட்டு!!

புதுச்சேரி, ஜன, 21

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் சாதனை படைத்த பொறியாளர் ஹரிஹரன் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதாக தொழில்நுட்பக் கல்விக் கிடைக்க சமூக நோக்கோடு பணியாற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியதால் உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் ஹரிஹரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பாராட்டினார்.தொழில் நுட்பமும் சமூகப் பொறுப்பும் இணைந்த சேவையை பாராட்டி அரசின் உயரிய அரங்கில் பொறியாளர் ஹரிஹரனுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களால் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ அமர்வின் போது, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகிலுள்ள தடப்பள்ளி காந்திநகரைச் சேர்ந்த ஸ்ரீ. ஹரிஹரன் இவர் மேற்கொண்டு வரும் சமூகநலன் சார்ந்த தொழில் நுட்பச் சேவைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற பதிவாக அங்கீகரிக்கப்பட்டன.மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ரீ.ஹரிஹரன், ஆராய்ச்சி, தொழில்நுட்ப புதுமை, மற்றும் நடைமுறைப் பயிற்சி வாயிலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவுத் திறன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறார். சமூகத் தேவைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அவரது தொழில்நுட்ப முயற்சிகள், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளாக அமைந்துள்ளன.குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி எளிதாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வகப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் வழிகாட்டல் செயல்பாடுகள், தொழில்நுட்ப கல்வி அணுகலை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சிகளாக பாராட்டப்படுகின்றன.இத்தகைய சமூக நோக்குடைய பணிகளுக்கான அங்கீகாரமாக, உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் கரங்களால், புதுச்சேரி சட்டப்பேரவையின் மேடையில் வழங்கப்பட்டது.ஒரு கிராமப்புற சூழலில் இருந்து வளர்ந்து, தொழில்நுட்ப அறிவையும் சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஒருவரின் பயணம், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்தால், நிலையான சமூக முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இவ்வங்கீகாரம் கருதப்படுகிறது.இந்த அரசுத் தந்த அங்கீகாரம், தனிநபர் சாதனையை மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தும் அரசின் பார்வையையும் பிரதிபலிக்கிறது.

செய்தி : ஆத்தி முத்து

Share This Article