வானிலை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட்; தென்காசி, தேனிக்கு மஞ்சள் அபாய அறிவிப்பு!

சென்னை: நீலகிரி, கோவைக்கு இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி, கோவைக்கு இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், தேனி, தென்காசி ஆகிய 2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 27,28ம் தேதி

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் வரும் ஜூன் 27,28 ஆகிய 2 நாட்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article