பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக தண்ணீர் லாரி பக்தர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக தண்ணீர் லாரி பக்தர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.

பழனி,ஜன,28

பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கிரிவீதியை சுற்றி ஆங்காங்கே குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சின்டெக்ஸ் டேங்களுக்கு இத்திருக்கோயிலில் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் லாரி மூலம் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு சாலைகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்களில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க்களுக்கும் இத்திருக்கோயில் லாரி மூலமே நீர் நிரப்பப்படுகிறது. அதே போன்று இத்திருக்கோயிலைச் சேர்ந்த உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்களுக்கும் இதன் மூலமே தண்ணீர் நிரப்பப்படுகிறது சட்ட மன்ற அறிவிப்பின்படி தைப்பூச மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இத்திருக்கோயிலைச் சார்ந்த இரண்டு இடங்களில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்க தேவையான தண்ணீர் வசதிக்கு வாடகை லாரி மூலமே தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே பக்தர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடவும் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கவும். கூடுதலாக 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர் லாரி உபயமாக மதுரையைச் சேர்ந்த M/s.Madurai Meenakshi Motors Private Limited நிறுவனத்தின் உரிமையாளர் திரு. S.R Ramasubramania Rajah மற்றும் குடும்பத்தினரால் ரூ.12,99,568 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு சிறிய ரக புதிய தண்ணீர் லாரி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை இரண்டு (2) ஆக உயர்ந்துள்ளது. மேற்கண்ட தகவலை பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் அறநிலை துறை சார்பில் செய்தி குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு : ரவிச்சந்திர பூபதி தலைமை நிருபர்.

Share This Article