நிரம்பிய பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி மற்றும் தங்கம் வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சி குவிந்தது!!

நிரம்பிய பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி மற்றும் தங்கம் வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சி குவிந்தது!!

பழனி,ஏப்ரல், 27

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் முடித்த பின்பு, அங்குள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெளிநாட்டு கரன்சி வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கோவிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் கிடைக்கும் பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று
தொடங்கியது
இதில் ரூ.4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 கிடைத்தது. இதுதவிர 748 கிராம் தங்கம், 12 கிலோ 893 கிராம் வெள்ளி பொருட்களும், 1,448 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தது. இந்த நிகழ்வின் போது கோவில் இணை ஆணையர் மாரிமுத்து,, இணை ஆணையர் உதவியாளர் லட்சுமி நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரத் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Share This Article