தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் வந்தார்: பானோத் ம்ருகேந்தர் லால் பதவியேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் 55பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Share This Article