தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் இல்லத்திருமண விழா: பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

தூத்துக்குடி-4.
தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் இல்லத்திருமண விழா பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் வைத்து மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் காவுராஜன்;. இவரது சொந்த ஊர் விக்கிரமசிங்கபுரம் ஆகும். காவுராஜன் – பத்மாவதி தம்பதியரின் மகள் உமா மகேஸ்வரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி வருகிறார். அரியப்பபுரம், கீழ லெட்சுமிபட்டி கார்மேகம் – சுந்தரி தம்பதியரின் மகன் கணேஷ் பிரபு கல்லிடைகுறிச்சி ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு 04.06.2026ல் பாபநாச சுவாமி – உலகம்மன் சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதன்பின் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் சகல வைபவங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண வரவேற்பு விழாவிற்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

காலை தீபம் நாளிதழ், போலீஸ் செய்தி நியூஸ் சேனல், செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிகையாளருமான எம்.ஆத்திமுத்து, தூத்துக்குடி பிரஸ்கிளப் பொருளாளரும் போலீஸ் டுடே செய்தியாளருமான ராஜு உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் – பத்மாவதி தம்பதியினர் மற்றும் அவரது மகன் உமாசங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

Share This Article