தூத்துக்குடியில் விஜய் போன்று சைக்கிளில் சென்று வீதி வீதியாக
விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் : பகுதி செயலாளர் ஆனந்த் குமார் தலைமையில் தவெக வினர் அசத்தல் பிரச்சாரம்!!
,தூத்துக்குடி,ஏப்ரல், 15



தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சில வேட்பாளர்கள் நூதன பிரச்சாரமாக ஹோட்டல்களில் பரோட்டா போடுதல், வடை, பஜ்ஜி போடுதல், அயனிங் செய்வது என பல்வேறு நூதன பிரச்சாரத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த அடிப்படையில்தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் ஸ்ரீநாத், வேட்பாளராக அறிவித்தும் தூத்துக்குடி வருகை தரும் பொழுது சுங்கச்சாவடி அருகே ஒரு ஹோட்டலில் மாஸ்டருடன் அமர்ந்து பஜ்ஜி போட்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார். மேலும் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீநாத் முத்துநகர் கடற்கரை பூங்கா, போன்றவற்றில் வாக்கிங் செய்து கொண்டு காலையில் வாக்கிங் செல்லும் நபர்களிடமும் வாக்கு சேகரித்தார் அதுபோல் பொது இடங்களில் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்் தூத்துக்குடி முன்னாள் மாமன்ற உறுப்பினரும், தவெக பகுதி செயலாளர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நேற்று திரவியபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம், பார்வதிஅம்மன் கோவில்தெரு, ஆகியபகுதிகளில் பகுதி செயலாளர் ஆனந்தகுமாரின் இரண்டு சக்கர வாகனத்தில் பின் அமர்ந்து கொண்டு வேட்பாளர் ஸ்ரீநாத் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். பின்னர் விஜய் ஸ்டைலில் சைக்கிளிலும் சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் பகுதி செயலாளர் ஆனந்த் குமார்,பொருளாளர் சரவண்ன், வட்டசெயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
“விஜய்யின் எழுச்சி” மற்றும் கட்சி கொள்கைகளை முன்வைத்து, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் தனது பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்து வருகிறார். பகுதி செயலாளர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது அனைத்து வார்டு பகுதிகளிலும் பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
செய்தி தொகுப்பு கண்ணன்