தூத்துக்குடி
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தூத்துக்குடி கணேசன் நகரில் உள்ள சின்னமணி பள்ளியில் படிக்கும் 143 மாணவ மாணவிகளுக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும். முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லபாண்டியன் தன் சொந்த செலவில் ஸ்கூல் பேக் நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பள்ளி துவங்கிய இரண்டாவது நாளிலேயே புது ஸ்கூல்பேக் நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கியதை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டனா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் சந்தானம், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அகஸ்டின், போக்குவரத்து தொழிற்சங்கத்தை சோ்ந்த சங்கர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், சென்னை டேனியல் டிரஸ்டி சோ்மன் தேவேந்திரன், மற்றும் மகேஷ்குமாா், ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
