கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!
கொடைக்கானல், பிப், 22
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தலைத் துாக்கும் கஞ்சா, போதைப்பொருட்கள், கலாசார சீர்கேட்டை கண்டித்தும், கொடைக்கானலில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்த திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.,) அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேற்றி புதுக்காடு 3 வது ‘ வார்டு பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் மதன்குமார் தலைமையில் இன்று ( 22/02/2026 ) திமுக அரசை கண்டித்து மாபெரும் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கொடைக்கானல் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர், சரவணன், நகர பொதுச் செயலாளர், ஞானசேகரன், மணிவாசகம், நகர துணை தலைவர் முருகையா, ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நகர செயலாளர் ஸ்ரீதர், அ.ம.மு.க, நிர்வாகி சக்திவேல் பாமக கோபிநாத், ஐ.ஜே.கே ஜோஸ்வா, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் கோடை.வி.ஆனந்த், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக அரசை கண்டித்தும் கொடைக்கானலில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்த திமுகவினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த தெருமுனைப் பிரச்சாரம் கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
கோடை வி.ஆனந்த்