கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி தூள் கிளப்பி வருகிறார் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளையராஜா! 
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி எம்பி பிறந்த தினத்தன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்து ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தொடர் நிகழ்ச்சியாக ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ அரசரடி ஊராட்சி, துப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா : ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி தூள் கிளப்பி வரும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளையராஜா!!